Wednesday, February 16, 2011

ஒட்டு

ஜனநாயகத்தின் பெயரால்-
ஓட்டுப் போட்டு
ஓட்டுப் போட்டு...
இன்று,
ஒட்டுப் போட
வழியின்றி
ஊழலில்
கிழிந்து கிடக்குது
இந்தியா!

Tuesday, February 15, 2011

மீனவன்

பிடித்த
மீன்
சாகும் முன்-
செத்துப்
போகிறான்
எம் மீனவன்!

அட போங்கடா

நரைத்த தலையில்
கருப்பு சாயம்
பூசியும்-
முகத்தில் தெரியுது
மூப்பு...

தலை முடியின்-
முன் முடியை
நேராக்கி
அதனையே
முன் நெற்றியில்
சுருளாக்கி-
கழுத்தின் கிடக்கும்
தங்கச் சங்கிலியும்,
கையில் கட்டிய கடியாரமும்
சரியாய் உள்ளதை உறுதிப்படுத்தி...

பேருந்தில்-
மூன்று மாதமாய்...
நான் பார்க்க
எனைப் பார்க்காத
அவள்...

அவள் இறங்கும்
நிறுத்தத்தில்
அவளுக்கு முன்னே
நான் இறங்கி நிற்க்கையில்-

என்னிடம் பேசிய
முதல்
பேச்சு-

மணி என்ன அங்கிள்?

அவர்

பொருளாதாரத்தை போதித்து
வந்த என்னை-
பொருள் ஆதாரத்தை
தேடும்,
இந்தப் பொல்லாத
அரசியலில்
கோர்த்து விட்டு...
ராவோடு,ராவாக
போனதேன் -
நரசிம்ம ராவே!