Friday, October 29, 2010

கோவையில்

தினமும்
தன் வேலை முடிந்து,
வீட்டுக்குப்
போகும் வழியில்
ஒரு காட்டு
காட்டிவிட்டு போகிறது
மழை!.....

குளிர்

மூட்டப்பட்ட தீயில்,

குளிர் காய்கிறது,

அடுத்து

 போட வேண்டிய

விறகு!

Thursday, October 14, 2010

அவர்

கூட்டுக்காக மீனம்பாக்கம்
ஓட்டுக்காக மதுரை
வீட்டுக்காக திருவாரூர்
பார்த்தால் பாவமாக இருக்கிறது,
                    அவர் அவருக்காக வாழ ஆசைப்பட்டால்,அவரை ஓய்வெடுக்க விடுங்களேன்.

படித்ததில் பிடித்தது

It is good that Ram gets some part of the land to settle down,
because now,Sita is running a travel agency,
Maruti is making cars,
Laxman might retire after the series against Australia,...
Shatrughan has joined BJP,

Sunday, October 10, 2010

படித்ததில் பிடித்தது

கிறிஸ்துவை நம்புகிறவன் கிருஷ்ணனை நம்பமாட்டான், கிருஷ்ணனை நம்புகிறவன் கிறிஸ்துவை நம்பமாட்டான், ஆனால், தன்னை உணர்ந்தவன் ,கிருஷ்ணனுக்குள் இருக்கும் கிறிஸ்துவையும்,கிறிஸ்துவுக்குள் இருக்கும் கிருஷ்ணரையும் தெளிவாக புரிந்து வைத்திருப்பான்.

நன்றி மகாகவி

தேடிச் சோறு நிதந் தின்று-பல
  சின்னஞ் சிறு கதைகள் பேசி -மனம்
    வாடித் துன்ப மிக வுழன்று -பிறர்
      வாடப் பல செயல்கள் செய்து -நரை
        கூடிக் கிழப் பருவ மெய்தி -கொடுங்
            கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல
               வேடிக்கை மனிதரைப் போலே -நான்
                  வீழ்வே னென்று நினைத்தாயோ?

Friday, October 8, 2010

என்ன கொடுமை சார்

வாய் நிறைய பான் போட்டுக்கொண்டு, பைக்கில் சென்று கொண்டே நட்டநடு சாலையில் அசிங்கமாக துப்புபவர்கள் திருந்தவே மாட்டார்களா?.