Sunday, October 10, 2010

நன்றி மகாகவி

தேடிச் சோறு நிதந் தின்று-பல
  சின்னஞ் சிறு கதைகள் பேசி -மனம்
    வாடித் துன்ப மிக வுழன்று -பிறர்
      வாடப் பல செயல்கள் செய்து -நரை
        கூடிக் கிழப் பருவ மெய்தி -கொடுங்
            கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல
               வேடிக்கை மனிதரைப் போலே -நான்
                  வீழ்வே னென்று நினைத்தாயோ?

No comments: